இரத்தினக்கல் மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Friday, 08 November 2019 - 11:38

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
6 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரத்தினக்கல் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து பேருவளை-ஹலககந்த பகுதியில் வசித்து வரும் நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மாணிக்கக்கல்லை வெட்டி மெருகூட்டுவதற்காக மேற்படி இரத்தினக்கல்லை வர்த்தகர் ஒருவர் குறித்த நபரிடம் வழங்கியுள்ளார். இருப்பினும் இரண்டு நாட்களுக்கு பிறகு இரத்தினக்கல் காணாமல் போனதென குறித்த நபர் தன்னிடம் தெரிவித்ததாக கூறி, வர்த்தகரினால் காவல்துறையில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் சந்தேக நபரிடம் இருந்த இரத்தினக்கல்லை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மேற்படி மாணிக்கக்கல்லின் பெறுமதியை அறிந்த பின்னர் அதை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்ததாக குறித்த சந்தேக நபர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரை இன்று களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.