28வது முறையாக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம்

Friday, 08 November 2019 - 12:50

28%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%90%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
60 வருடங்களாக நீடிக்கின்ற கியூபாவிற்கான அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு எதிராக 28வது முறையாக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

நேற்று இதுதொடர்பான வாக்கெடுப்பு ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது 187 நாடுகள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவளித்தன.

பிரேசில் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மாத்திரமே அமெரிக்காவிற்கு ஆதரவாக வாக்கினை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

1960ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 19ம் திகதி, அமெரிக்காவினால் கியுபாவிற்கு எதிராக முதன்முறையாக பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.