ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் நிறைவு செய்வேன்

Friday, 08 November 2019 - 12:53

%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D
ஏற்றுக் கொண்ட பொறுப்புகள் அனைத்தையும் நிறைவு செய்வதோடு, மக்களுக்காக அர்ப்பணிபுடன் செயலாற்ற தாம் தயாராக இருப்பதாக சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

தாம் அமைச்சுப் பதவி எதனையும் வகிக்காத போதும், எடுத்துக் கொண்ட பொறுப்புகளை நிறைவேற்றியுள்ளேன்.

ஆனால் பொறுப்பான அமைச்சுப் பதவியில் இருந்துக் கொண்டு சேவை செய்யாத ஒருவர் எவ்வாறு ஜனாதிபதி ஆனதும் சேவை செய்வார்?

தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாட்டை பிரிப்பதற்கு இடமளிக்கின்றவர்களுக்கே ஆதரவளித்து வந்துள்ளது.

தற்போதும் அதனையே செய்துள்ளது என்று கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பல இளைஞர்களை எரியூட்டி அழித்த பிரேமதாசவின் யுகத்தை மீண்டும் நாட்டில் அனுமதிக்க முடியாது என்று கூறினார்.

ஆயிரக்கணக்கான இளைஞர்கள் டயர்கள் போட்டு பிரேமதாச காலத்தில் எரிக்கப்பட்டனர்.

இரத்தினபுரியில் மாத்திரம் 3000க்கும் அதிகமானவர்கள் அவ்வாறு கொல்லப்பட்டனர்.

அவ்வாறான யுகம் மீண்டும் நாட்டில் ஏற்படக்கூடாது என்று அவர் கூறினார்.