ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை பெப்ரவரி மாதத்தில்...

Friday, 08 November 2019 - 13:06

%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...
பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தாக்கல் செய்துள்ள மனு, மேன்முறையீட்டு நீதிமன்றினால் எதிர்வரும் 2020ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி விசாரணைக்கு எடுததுக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொட மற்றும் நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர ஆகியோரால் பரிசீலிக்கப்பட்டது.

நீதிமன்ற கட்டளையை மீறி, முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயக தீர்த்தக்கரையில் பௌத்த பிக்குவின் பூதவுடலை தகனம் செய்த சம்பவம் தொடர்பில், கலகொட அத்தே, ஞானசார தேரருக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் முல்லைத்தீவு காவற்துறை அதிகாரி மற்றும் முல்லைத்தீவு காவற்துறை தலைமை பரிசோதகர் ஆகியோரும் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இந்த மனுமீதான விசாரணையின் போது மன்றில் முன்னிலையாகுமாறு ஏலவே பிறப்பிக்கப்பட்டிருந்த உத்தரவின் அடிப்படையில், இன்று ஞானசார தேரர் உட்பட்ட பிரதிவாதிகள் மூவரும் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

இதன்போது, அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் 27ம் திகதி இந்த வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டதுடன், அன்றையதினம் மன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அத்துடன் வழக்கு உதவிகளுக்காக சட்டமா அதிபர் திணைக்களத்தையும் விசாரணைகளில் பிரசன்னமாகுமாறு அறிவுறுத்தல் கடிதம் அனுப்ப உத்தரவிடப்பட்டது.