பல்வேறு அவசரகால நடவடிக்கைகள்...

Friday, 08 November 2019 - 20:38

%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...
அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸில் அசாதாரண நிலையை எட்டியுள்ள காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு அவசரகால நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாத்திரம் 90 இற்கும் அதிகமான புதிய தீப்பரவல்கள் ஏற்பட்டுள்ளன.

வரட்சியான 35 செல்ஷியஸ் வெப்ப தன்மையை கொண்டுள்ள பிரதேசங்களில், கடும் காற்று காரணமாக தீப்பரவல்களை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மீட்பு பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பெருமளவான வீடுகளில் உள்ளவர்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், அவர்களை மீட்பதில் பல்வேறு  பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

தீயணைப்பு  பணிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைக்கும் இயந்திரங்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 70 வாநூர்திகளும் தொடர்ச்சியான பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள காட்டு தீ குயீன்ஸ்லாந்து மற்றும் மேற்கு அவுஸ்திரேலிய மாவட்டங்களையும் பாதிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.