விசேட மேல் நீதிமன்றினால் நிராகரிப்பு

Friday, 08 November 2019 - 17:24

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9F+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+
எவன் கார்ட் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் சார்பில் விடுக்கப்பட்ட  பிணை கோரிக்கை கொழும்பிலுள்ள விசேட மேல் நீதிமன்றின் மூவரடங்கிய தீர்ப்பாயத்தினால் நிகராகரிக்கப்பட்டுள்ளது.

நீதியரசர்களான தம்மிக்க கனேபொல, ஆதித்ய பட்டபெதி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன ஆகியோரினால் குறித்த பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

இதேநேரம், குறித்த வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி மீள விசாரணக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த தினத்தில் நிஸ்ஸங்க சேனாதிபதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சட்டத்துக்கு புறம்பான முறையில் எம்.வீ. எவன் கார்ட் கப்பலில் தானியக்க ஆயுதங்களையும், செயற்திறன் கொண்ட வெடிமருந்துகளையும் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை உள்ளிட்ட 7 ஆயிரத்து 573 குற்றச்சாட்டுக்களின் கீழ், தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 7ஆவது பிரதிவாதியாக நிஸ்ஸங்க சேனாதிபதி பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.