முறையான வேலைத்திட்டம் தம்வசம் உள்ளது...

Sunday, 10 November 2019 - 13:03

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கல்வித்துறை மட்டுமன்றி அவர்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் தம்வசம் உள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பதுளையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தேயிலை தொழிற்துறை இன்று வீழ்ச்சி நிலையை எதிர்நோக்கியுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முதல் சிறுதோட்டத் தொழிலாளர்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் தேயிலையின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியடைந்தமையே இதற்கான காரணமாகும்.

இந்த நிலையில், தேயிலை தொழிற்துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா வேதனத்தை வழங்குவதற்கு தாங்கள் உறுதியளித்துள்ளதாக கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேநேரம், அவர்களுக்காக அவசியமாக உட்கட்டமைப்பு வசதிகளையும், வீடுகளையும் அமைத்துக்கொடுப்பதற்கு தொண்டமானுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தற்போதைய அரசாங்கம் உருவாக்கப்பட்ட நாள்முதல் மோசடிகள் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கள்வர் யார் என்பது மக்களுக்கு தெரிகின்றது.

மத்திய வங்கியில் மோசடியில் ஈடுபட்டவர்கள், துறைமுகம் மற்றும் விமான நிலையத்தை விற்பனை செய்தவர்கள் இந்த அரசாங்கத்தைச் சேர்ந்தவர்களாவார்.

பாடசாலை மாணவர்களுக்கான சீருடை துணிக்கு பதிலாக வவுச்சர் முறைமை இந்த அரசாங்கத்தினால்தான் கொண்டுவரப்பட்டது.

அது குறித்து சஜித் பிரேமதாஸ ஏதாவது கருத்து வெளியிட்டிருப்பரா என மஹிந்த ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த அரசாங்கத்தின் அனைத்து தவறுகளுக்கும் கையுயர்த்திய சஜித் பிரேமதாஸ, தற்போது எதிர்க்கட்சியை சார்ந்தவர் போல கருத்து தெரிவிக்கின்றார் என்றும் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.