சூறாவளி ஒன்று தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதனை அடுத்து மக்களை அகற்றும் பணிகள் ஆரம்பம்..

Sunday, 10 November 2019 - 13:40

%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D..
பங்களாதேஷின் கரையோர பகுதி மற்றும் பள்ள பிரதேசங்களை பாரிய சூறாவளி ஒன்று தாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டதனை அடுத்து அந்த பிரதேசங்களில் உள்ள மக்களை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சுமார் ஒரு லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த சூறாவளி குறிப்பிட்ட பிரதேசங்களை கடந்து செல்லும் என இந்திய வளிமண்டல திணைக்களம் சற்று முன்னர் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷில் உள்ள இரு துறைமுகங்களுக்கு அதி உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக 'அல்-ஜசீரா' தெரிவித்துள்ளது.

துறைமுக பிராந்தியத்தில் இரண்டு மீட்டருக்கும் அதிகமான அலை ஏற்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 55 ஆயிரம் தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.