அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்காகவே...

Sunday, 10 November 2019 - 19:18

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87...
நாட்டில் நடைபெறும் தவறான அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதற்காகவே தாம் தேர்தலில் போட்டியிடுவதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
கலாவௌ பகுதியில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
நாட்டில் போசாக்கான உணவை தயாரிப்பதற்கு விவசாயிகளுக்கு உரத்தை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
 
அதேநேரம் அவர்களுக்கான காப்புறுதி திட்டம், ஓய்வூதிய திட்டம் என்பனவற்றையும் அறிமுக்கப்படுத்துவதற்கு தாம் முன்வந்துள்ளோம்.
 
சிறந்த நீர் முகாமைத்துவத்தை ஏற்படுத்தி விவசாயத்திட்டத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுத்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
தம்முடன் போட்டியி;டும் எதிர்தரப்பினருக்கு தமது கொள்கை பிரகனத்தை கொண்டு வெற்றியை பெற்றுக்கொள்ள முடியாது என்பதை அறிந்து தற்போது போலி பிரசாரங்களை முன்னெடுகிறார்கள்.
 
அவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் சிந்திக்காது செயற்பட்டனர் அதுவே அவர்களுக்கு இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது.
 
தவறான அரசியல் கலாசாரத்தை மாற்றி;யமைப்பதற்காக தாம் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்வந்தேன்.
 
அந்த வகையில் நடைமுறையில் செயற்படுத்தக்கூடிய திட்டங ;களையே தான் முன்வைத்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.