கல்முனையில் பாரிய அபிவிருத்தி திட்டம்

Sunday, 10 November 2019 - 19:17

%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
கல்முனையில் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
 
கல்முனையில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கல்முனை மாத்திரமல்லாது அதனை சுற்றியுள்ள சகல பகுதிகளினதும் அபிவிருத்திகளை முன்னேடுக்கவுள்ளோம்.
 
இளைஞர்களுக்காக ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தொழில்நுட்ப கூடங்கள் ஆரம்பிக்கப்படும்.
 
அத்துடன், ஆங்கிலம் கற்கை என்பனவற்றுடன், சர்வதேச தரத்திலான கற்கைகளை இளைஞர்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 
இவ்வாறான எண்மான புரட்சியின் மூலம் முழு இலங்கைiயும் எண்மான தொழில்நுட்பமயப்படுத்துவதாக சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.