மகிந்த ராஜபக்ஸ வெளியிட்ட கருத்து..!

Sunday, 10 November 2019 - 19:39

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..%21+
தமிழ் மக்கள் தலைநிமிர்ந்து வாழக் கூடிய சூழலை நாம் உருவாக்குவோம் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
 
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஸவுக்கு ஆதரவு தெரிவிக்கும் பிரச்சாரக் கூட்டம்  இன்று பிற்பகல்  கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது.
 
இதன் போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
ஜக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் போன்று நாம் தமிழ் மக்களை ஏமாற்றப் போவதில்லை.
 
அவர்களின் தேர்தல் விஞ்ஞபனத்தில் கூட மூன்று மொழிகளிலும் மூன்று விதமாக விடயங்களை முன்வைத்துள்ளனர்
 
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இந்த அரசாங்கத்தில் 4000 ஆயிரம் மில்லின்களை பெற்றுள்ளனர்.

ஆனால் என்ன செய்தனர்? 

கிளிநொச்சியில் எங்களுடைய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தியை விட சொல்லுமளவுக்கு எந்த அபிவிருத்திப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு  தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறது. 
 
சஜித் ஏமாற்றுகிறார்.

இதற்குள் இணைந்துகொண்டு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் கூட்டு களவானிகளாக உள்ளனர்.
 
வரும் 18 ஆம் திகதி கோட்டாபாய ராஜபக்‌ஷ விமான ரிக்கட் பெற்றுள்ளார் என பொய்யான பரப்புரையை மேற்கொண்டுள்ளனர்.
 
அவர் ஜனாதிபதி மாளிகைக்கு செல்வதற்கான ரிக்கட்யே பெற்றுளள்ளார்.
 
அவர் அமெரிக்க பிரஜை என அமெரிக்காவிலும், இலஙகையிலும் வழக்குத் தொடுத்தனர் அவை அனைத்திலும் தோல்வியே கண்டனர்.
 
நாம் மீண்டும் ஜனாதிபதியாக வந்தால்  எங்களுடை காலத்தில் போன்று அபிவிருத்திகளை கொண்டுவருவோம்.
 
முன்னாள் போராளிகளுக்கு  அரச வேலைவாய்ப்பு, மாற்றுவலுவுள்ளோர்கள் பெண்த தலைமைத்துவ குடும்பங்கள் மேம்பாடு, அத்தோடு சிவில் பாதுகாப்புத் திணைக்களம் பலப்படுத்த்பபட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
 
இதேவேளை இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச கிளிநொச்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் இல்லத்தில் தேனீர் விருந்துபசாரத்திலும் பங்கு கொண்டார்.
 
தொடர்ந்து அங்கு கிளிநொச்சி மாவட்டம் மற்றும் யாழ் மாவட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அங்கஜன் இராமநாதனிடம் கேட்டறிந்து கொண்டார்.
 
தொடர்ந்து கரடிபோக்கு சந்தியில் அமைந்துள்ள தனியார் விடுதி ஒன்றில் கிளிநொச்சி மாவட்ட புத்தி ஜீவிகள் மற்றும் வர்த்தகர்களை சந்தித்த மகிந்த ராஜபக்ச கலந்துரையாடினார்.
 
அதேவேளை அவர்களின் பிரச்சினைகள் தொடரபிலும் அவர் கேட்டறிந்து கொண்டார்.