15 ஆம் திகதிவரை விளக்கமறியலில்

Sunday, 10 November 2019 - 19:35

15+%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+
தங்கொட்டுவை – கடுகேந்த சந்தியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவற்துறை அதிகாரிக்கு கையூட்டல் வழங்கிய குற்றச்சாட்டில் கைதான இரண்டு இளைஞர்களையும் எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
 
அவர்கள் மாரவில நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
நீர்கொழும்பு பகுதியி;ல் கால்நடைகளுடன் பாரவூர்தியொன்று நேற்று அதிகாலை பயணித்துள்ள நிலையில், அதனை நிறுத்தி சோதனையிடுவதற்கு காவற்துறையினர் முற்பட்டுள்ளனர்.
 
எனினும் குறித்த பாரவூர்தி காவற்துறையினரின் உத்தரவை மீறி பயணித்துள்ளது.
 
இந்தநிலையில் அந்த பாரவூர்தி;க்கு பின்னால் கெப்ரக வாகனத்தில் சென்ற இளைஞர்கள் குறித்த பாரவூர்தியில் பயணித்தவர்கள் தமது குழுவினர் என கூறி காவற்துறையினருக்கு ஆயிரம் ரூபா கையூட்டலை வழங்க முற்பட்டுள்ளனர்.
 
இதனையடுத்து அவர்களை காவற்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.