தமக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கை..

Monday, 11 November 2019 - 8:26

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..
தமக்கு எதிராக சேறுபூசும் நடவடிக்கைகளை சில தரப்பினர் மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
அனுராதபுரத்தில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
 
தாம் அமெரிக்கப் பிரஜை என்று போலியாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

அவ்வாறான பிரசாரங்களை யாரும் நம்ப வேண்டியதில்லை.

நாட்டின் சுபீட்சமான எதிர்காலம் ஒன்றை தாம்மாலேயே உருவாக்க முடியும்.

அதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் தம்மிடம் உள்ளன.

ஏற்கனவே பொறுப்பேற்றுக் கொண்ட பல கடமைகள் தம்மால் நிறைவேற்றப்பட்டுள்ளன.
 
நாட்டின் எதிர்காலத்தையும் தாம் பொறுப்பேற்றுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கைப் பிரஜையே அன்றி வேறு எந்த நாட்டின் பிரஜையும் அல்லவென, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
 
முல்லைத்தீவில் நேற்று நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்காவிலும், இலங்கையிலும் வழக்குகள் தொடரப்பட்டன.

அவற்றையெல்லாம் கடந்து தற்போது அவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
 
இவை அரசியல் ரீதியாக அவரை தோற்கடிக்க செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளே என்றும் மகிந்த ராஜபக்ஷ இதன் போது தெரிவித்தார்.