இலவசமாக சேவை

Monday, 11 November 2019 - 8:42

%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88
இலவசமாக சேவையை முன்னெடுக்கும் சுயாதீன வேட்பாளராக தாம் செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஷ தெரிவித்துள்ளார்.
 
நுவரெலியாவில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
 
அங்கு உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெற்றால், தேயிலை மரங்களுக்கு பதிலாக மல்லிகைப்பூ செடிகளை நாட்டுவதாக கூறி இருப்பதாக குறிப்பிட்டார்.
 
அதேநேரம் அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற வேலைத்திட்டத்தின் கீழ் 9 பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

நுவரெலியால் வசிக்கின்ற மக்களை மறக்கக்கூடாது.

மலையகத்தில் சிங்கராஜவனம், சிறிபாத வனம் போன்ற அதிபின்தங்கிய பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

அங்கு உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, இலவசமாக சேவை வழங்கும் சுயாதீன வேட்பாளராக தாம் முன்வந்திருப்பதாக கூறினார்.

தான் முன்வைத்திருக்கும் கொள்கை பிரகடனத்தை நன்றாக படியுங்கள்.
 
அதில் இலவசமாக தன்னுடைய சேவைகளை மக்களுக்கு எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் பல தெளிவுப்படுத்தல்களை வழங்கியிருப்பேன்.
 
ஜனாதிபதியாக தேர்வானாலும் தனிப்பட்ட வாகனங்களுக்கான எரிப்பொருள்களை தனே வழங்கி அதனை பாவனைக்குட்படுத்துவேன்.
 
எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டின் வறுமையை இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளேன் என்று, புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.