ஜனாதிபதியை சந்தித்த ஆளுனர்கள்

Monday, 11 November 2019 - 8:45

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
அனைத்து மாகாணங்களின் ஆளுனர்களும் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்தனர்.
 
ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
 
ஜனாதிபதி தமது பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், ஆளுனர்களுடன் இடம்பெறும் இறுதி சந்திப்பு இதுவாகும்.
 
இதற்கிடையில், ஆளுனர்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதிக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
 
இதுதொடர்பான கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கும், ஆளுனர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர்ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
சில ஆளுனர்கள் ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த கடிதங்கள் அனுப்பி வைக்க்பபட்டுள்ளன.