கரையோர பகுதிகளை தாக்கிய சூறாவளி

Monday, 11 November 2019 - 9:13

%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF
பங்களாதேஸ் மற்றும் இந்திய கரையோர பகுதிகளில் புல்புல் சூறாவளி தாக்கியுள்ளது.
 
இதில் குறைந்த பட்சம் 13 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
 
இந்தியாவின் மேற்கு வங்கத்தில் மாத்திரம் 7 பேர் பலியாகினர்.
 
மேலும் 20 லட்சம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
மணிக்கு 120 கிலோமீற்றர் வேகத்தில் இந்த சூறாவளி தாக்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
 
சூறாவளிக்கு முன்னதாகவே மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதால், பெரும் ஆபத்துகள் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
தற்போது சூறாவளி வலுவிழந்துள்ளது.