8 ஆயிரம் தேரர்களுக்கு சந்தர்ப்பம் இல்லை

Monday, 11 November 2019 - 12:45

8+%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+
நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 8 ஆயிரம் தேரர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
 
ஆணைக்குழு ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளது.
 
தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்கியுள்ள முறைப்பாடுகளுக்கமைய இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த விடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தேரர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை ஆட்பதிவு திணைக்களம் மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியன பதிவு செய்யாமையே இதற்கான காரணம் எனவும் மனித உரிமை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
 
அதேநேரம், அவர்களுக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழவினால் அங்கிகரிக்கப்பட்ட அட்டைகளை தயாரிப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.