ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் அவதானம்..

Tuesday, 12 November 2019 - 19:31

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளிநாட்டு ஊடகங்கள் அவதானம் செலுத்தியுள்ளன.

ரொய்ட்டர்ஸ் மற்றும் த ஹிந்து முதலான செய்திச் சேவைகளின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய, ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வாய்ப்பைக் கொண்டுள்ள பிரபலமான வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவே என குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ கருத்துக்கணிப்பு இடம்பெறாதபோதும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவதற்கான பிரபலமான வேட்பாளர் என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

அவரின் எதிர்த்தரப்பு போட்டியாளரான சஜித் பிரேமதாஸ மந்த நிலையான பயணத்தில் உள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதேநேரம், சக்திமிக்க தலைவர், யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், உட்கட்டமைப்பு வசதிகளுடன் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ மீது எதிர்பார்ப்பு உள்ளதாக த ஹிந்து நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.