வியட்நாம் ஆசிரியருக்கு 11 வருட சிறை

Friday, 15 November 2019 - 19:27

%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+11+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88
அரச எதிர்ப்பு செய்திகளை முகப்பு நூலில் பதிவேற்றினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் வியட்நாம் ஆசிரியர் ஒருவருக்கு இன்று 11 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய வியட்நாமில் வெளிப்படை தன்மையான சமூக மாற்றங்கள் பாரிய அளவில் மாற்றம் பெற்றுள்ள போதிலும், ஆளும் கொம்யூனிச கட்சி கடுமையான ஊடக தணிக்கையினை கடைப்பிடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச நிர்வாகத்தை விமர்சிப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை வியட்நாம் நீதித்துறை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வியட்நாம் உட்பட தெற்காசிய நாடுகளை சேர்ந்தவர்கள் அரச எதிர்ப்பு பதாதைகள் என்பனவற்றை முகப்பு நூல் மூலம் வெளிப்படுத்தி வருவதாக முகப்பு நூல் அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வியட்நாமின் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

அதேவேளை, கடந்த செப்டம்பர் மாதம் முதல் சீனாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜப்பானிய கல்விமான் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார்.

சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அடுத்த வருட ஆரம்பத்தில் ஜப்பானுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளும் நிலையில், ஜப்பானிய கல்விமான் விடுவிக்கப்படுவதாக சீன அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தின் விசேட பேராசிரியர், சீன சட்டங்களை மீறினார் என்ற குற்றத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

ஆனால், ஜப்பானிய ஊடகங்கள் பேராசிரியர் சீனாவில் உளவு பார்த்தார் என்ற சந்தேகத்திலேயே தடுத்து வைக்கப்பட்டார் என செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.