லிபோர்னிய பாடசாலையொன்றில் துப்பாக்கிச் பிரயோகம்

Saturday, 16 November 2019 - 20:26

%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
அமெரிக்காவின் கலிபோர்னியாவிலுள்ள பாடசாலையொன்றில் துப்பாக்கிச் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தன்னைத்தானே சுட்டுக் கொண்ட மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கலிபோர்னியாவின் தென் பகுதியில் உள்ளது சாகஸ் உயர்நிலைப் பாடசாலையில் கல்வி கற்கும் 16 வயதான மாணவனே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கி பிரயோகத்தில் 2 மாணவர்கள் முன்னதாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டை நடத்திய மாணவன், தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.