ஹொங்கொங் செல்லவுள்ள சீன இராணுவம்

Saturday, 16 November 2019 - 20:30

%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D
ஹொங்கொங்கில் பொதுமக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக சீனா தமது இராணுவத்தை அங்கு அனுப்பிவைத்துள்ளது.

ஹொங்கொங்கில் குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவர்களை, சீனாவுக்கு நாடுகடத்தி, வழக்கு விசாரணைக்கு ஏதுவாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர ஹொங்கொங் நிர்வாகம் தீர்மானித்தது.

இதற்கு எதிரான ஹொங்கொங்கில் இலட்சக்கணக்கான மக்கள் கடந்த 5 மாதங்களாக வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கைதிகள் பரிமாற்ற சட்டமூலத்தை இரத்துச்செய்ய வேண்டும், ஹொங்கொங் அரசியலில் சீனா தலையிடுவதை நிறுத்த வேண்டும், சுதந்திரமான தேர்தல், காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்தல், போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் குறித்து விசாரணை மேற்கொள்ளுதல் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் தொகைவிடப்பட்டது.

வார இறுதி நாட்களில் நடைபெற்று வந்த போராட்டம் பின்னர் நாளாந்தம் முன்னெடுக்கப்படுகிறது.

புதிய சட்டமூலத்தை கைவிடுவதாக ஹொங்கொங் நிர்வாகம் அறிவித்தபோது, சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் பணியில் ஹொங்கொங் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களும் பதிவாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சீன இராணுவத்தின் ஹொங்கொங் படைப்பிரிவை சேர்ந்த இராணுவத்தினர் ஹொங்கொங் நகரில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.