தேர்தல்கள் ஆணையாளர் கோட்டாபய தொடர்பில் கூறிய விடயம்...!

Sunday, 17 November 2019 - 16:26

%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D...%21
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் பெறுபேறுகளுக்கு அமைய ஶ்ரீ லங்கா பொது ஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

கொழும்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச அவரின் தேர்தல் விஞ்ஞாபன கொள்கையை செயற்படுத்துவார் என மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் எனவும் மகிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.

நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச 69 இலட்சத்து 24 ஆயிரத்து 255 வாக்குகளை பெற்றிருந்ததோடு சராசரியாக நூற்றுக்கு 52.25 வீத வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 55 இலட்சத்து 64 ஆயிரத்து 239 வாக்குகளை, சராசரியாக நூற்றுக்கு 41.99 வீத வாக்குகளை பெற்றார்.

தேசிய மக்கள் சக்தி சார்பாக போட்டியிட்ட அநுரகுமார திசாநாயக்க 4 இலட்சத்து 18 ஆயிரத்து 553 வாக்குகளை பெற்றார்.

மேலும் 7 ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ச நாளை முற்பகல் 11 மணியளவில் அநுராதபுரத்தில் வைத்து பதவிபிரமாணம் செய்து கொள்ளவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.