பாக்கிஸ்தானின் முன்நாள் பிரதமர் நவாஸ் ஷெரீபின் வேண்டுகோளுக்கு அமைய மருத்துவ வசதிகளை பெறுவதற்கு லண்டன் செல்ல பாக்கிஸ்தானிய நீதிமன்றம் ஒன்று அனுமதியளித்துள்ளது.
நான்கு வார காலத்தினுள் மருத்துவ சிகிச்சையினை பெற்றதன் பின்னர் தாயகம் திரும்ப வேண்டும் எனவும் நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.
எப்படியிருப்பினும் லண்டனில் உள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பட்சத்தில் சிகிச்சைக் காலத்தை நீடிக்க நீதிமன்றம் அனுமதிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.