பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ள விடயம்..

Tuesday, 19 November 2019 - 8:38

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..
ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கின்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாத அமைச்சர்களையும் தங்களது ஆட்சியில் இணைத்துக்கொண்டு செயற்பட போவதில்லை என ஸ்ரீ லங்கா பொது ஜன முன்னணி தெரிவித்துள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியில் எந்தவித குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படாத அமைச்சர்களை தங்களது ஆட்சியில் இனைத்துக்கொள்வதற்கான அவசியம் ஏற்படாது.

தங்களது வெற்றிக்கு உதவிய 40 கட்சிகளும், 69 இலட்சத்துக்கும் அதிகமான ஆதரவாளர்களும் இருக்கின்றார்கள்.

ஆகவே அவ்வாறானதொரு தேவைப்பாடுகள் ஏற்படாது என பசில் ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஓன்பது மாகாணங்களில் ஏழு மாகாணங்களில் தமது வெற்றியை பதிவு செய்திருக்கிறோம்.

எனினும் தோல்வியடைந்த இரண்டு மாகாணங்கள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

இல்லையென்றால் அங்கு சில இனவாத, தீவிரவாத மற்றும் சர்வதேச தலையீடுகள் ஏற்படுத்தப்படுவதற்கான வாய்ப்பேற்படும்.

அங்குள்ள சில தலைவர்கள் தமது அரசியல் தேவைக்காக மக்கள் மத்தியில் தவறான சிந்தனைகளை விதைத்திருக்கிறார்கள் என பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.