கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க உத்தேசம்...

Tuesday, 19 November 2019 - 13:13

%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D...
புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்திக்க எதிர்பார்த்திருப்பதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் இரா.சம்பந்தன் இதனை எமது செய்தி சேவையிடம் தெரிவித்தார்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்கான தொலைபேசியில் உரையாடியாதாகவும், இதன்போது தம்மை சந்திக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்ததாகவும் சமந்தன் கூறினார்.

இதன்படி விரைவில் அவரை சந்திப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.