கட்டுப்பணத்தை இழந்த ஜனாதிபதி வேட்பாளர்கள்

Tuesday, 19 November 2019 - 13:27

%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் 35 பேரில், 33 பேர் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

தேர்தல் விதிகளின்படி 5 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளர், தமது கட்டுப்பாணத்தை மீளப்பெற முடியாது.

இந்த தேர்தலில், சிறிலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக போட்டியிட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, 52.25 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச, 41.99 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார்.

ஏனையோரில் அனுரகுமார திஷாநாயக்க 3.16 சதவீத வாக்குகளையே அதிகபட்சமாக பெற்றிருந்தார்.

இந்தநிலையில் ஏனைய 33 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.

கட்சி ஒன்றின் வேட்பாளராக போட்டியிட்டவர்கள் 50000 ரூபாவினையும், சுயெட்சைக் குழுவின் வேட்பளராக களமிறங்கியவர்கள் 75000 ரூபாவினையும் கட்டுப்பணமாக செலுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.