மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீப் லண்டன் பயணம்

Tuesday, 19 November 2019 - 14:49

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%B7%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் புறப்பட்டுள்ளார்.

ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக சமீபத்தில் அவருக்கு பிணை வழங்கப்பட்டது. ஆனால் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயரை பாகிஸ்தான் அரசு நீக்காததால் அவர் லண்டன் செல்வதில் சிக்கல் எழுந்தது.

நவாஸ் ஷெரீப் இது தொடர்பாக லாகூர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எந்தவித நிபந்தனையும் இன்றி நவாஸ் ஷெரீப்பின் பெயரை வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து நீக்க அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்நிலையில், அனைத்து வகையான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை கொண்ட விமான ஆம்புலன்சில் நவாஸ் ஷெரீப் இன்று லண்டன் நோக்கி புறப்பட்டுள்ளார்.