இஷ்ரேல் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் முக்கிய அறிவிப்பு

Tuesday, 19 November 2019 - 19:28

%E0%AE%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
மேற்கு கரையில் இஷ்ரேல் நடத்துகின்ற குடியேற்றங்கள் சர்வதேச சட்டவிதிகளுக்கு புறம்பானதாக இனிமேல் கருதப்பட மாட்டாது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி இஸ்ரேல் தொடர்பாக அமெரிக்கா சுமார் 40 ஆண்டுகளாக கடைபிடித்துவந்த கொள்கை மாற்றப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் இந்த தீர்மானம் பலஸ்தீனை மேலும் பாதித்துள்ளது.

இந்த தீர்மானத்தை இஸ்ரேல் நாட்டின் அரசாங்கம் வரவேற்றுள்ளது.

ஆனால் பாலஸ்தீன் மற்றும் ஏனைய நாடுகள் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், இது மேலும் அமைதியின்மையை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்துள்ளன.