இந்தியாவில் அதிகரிக்கவுள்ள கைப்பேசிகளின் சேவை கட்டணங்கள்

Tuesday, 19 November 2019 - 20:15

%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+
தொழில் போட்டி மற்றும் நட்டங்களை சமாளிக்க, வரும் டிசம்பர் மாதம் கைப்பேசிகளின் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக ஏர்டெல் மற்றும் வோடோபோன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நாட்டில் கைப்பேசி பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால், பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல், ஆகியவை வீழ்ச்சியே சந்தித்தது.

இதனால், அந்த நிறுவனங்கள் நட்டத்தில் இயங்கியதால், இரு நிறுவனங்களையும் ஒன்றிணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஏர்டெல், வோடோபோன் ஐடியா போன்ற தனியார் தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் சந்தையில் சரிவை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஜியோ நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை கவர்ந்ததே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.