வட்ஸ்அப் செயலி குறித்து புதிய அறிவுறுத்தல்...

Wednesday, 20 November 2019 - 8:01

%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...
வட்ஸ்அப் பயன்பாட்டாளர்கள் தங்களின் கைத்தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயலியை புதுப்பித்துக்கொள்ளுமாறு இந்தியாவின் முக்கிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான செர்ட் அறிவுறுத்தியுள்ளது

தகவல் பயன்பாட்டின் பழைய பதிப்புகளில் பாதிக்கப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறியப்படாத இலக்கங்களிலிருந்து அனுப்பப்பட்ட கோப்பினால் சாத்தியமான சிக்கலைத் தூண்டக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் கைத்தொலைபேசிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று நம்பிக்கை கொள்வதற்கு எவ்வித காரணமும் இல்லை என்று வட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

கைத்தொலைபேசிகளில் ஸ்பைவேரை  நிறுவனம் அதன் மென்பொருள் பயன்படுத்தப்பட்டதாக வட்ஸ்அப் ஏற்றுக்கொண்ட பின்னர் இந்த புதிய சிக்கல் நிலை குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பயனர்கள் காணொளி கோப்பைத் திறந்தால், மென்பொருள் தொலைபேசியில் தன்னை நிறுவிக் கொள்வதாகவும், பெகாசஸ் என்ற தீம்பொருளைப் போலவே, இது ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

இந்தியாவில் 400 மில்லியன் வட்ஸ்அப் பயனர்கள் உள்ளனர்.

அது இந்தியாவை அதன் மிகப்பெரிய சந்தையாக மாற்றுகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.