புதிய ஆளுநர்கள் நியமனம்..

Thursday, 21 November 2019 - 9:37

%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், ஆறு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.

மேல் மாகாண ஆளுநராக சீதா அறம்பேபொல, தென் மாகாண ஆளுநராக விலி கமகே, வடமேல் மாகாண ஆளுநராக ஏ.ஜே.எம். முஸம்மில் ஆகியோர் சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.

சப்ரகமுவ மாகாண ஆளுநராக டிக்கிரி கொப்பேகடுவ, ஊவா மாகாண ஆளுநராக ராஜா கொள்ளுரெ, மத்திய மாகாண ஆளுநராக லலித் யு கமகே ஆகியோர் சத்தியபிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும், வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை.

வடக்கு மாகாண ஆளநராக கலாநிதி சுரேன் ராகவணும், கிழக்கு மாகாண ஆளுநராக ஷான் விஜேலால் டி சில்வாவும், வடமத்திய மாகாண ஆளுநராக சரத் ஏக்கநாயக்கவும் பயணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.