அலரி மாளிகையை விட்டு வௌியேறினார் ரணில்...!

Thursday, 21 November 2019 - 12:32

%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்வுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதையடுத்து, அலரிமாளிகையிலிருந்து அவர் வெளியேறியுள்ளார்.

இந்த நிலையில், புதிய அரசாங்கத்தின் பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், சத்தியபிரமாணம் மேற்கொள்ள உள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

இதையடுத்து, பிற்பகல் 3 மணிக்கு, பிரதமர் தனது காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்க உள்ளார்.

இதேநேரம், அடுத்த பொதுத் தேர்தல்வரை ஆட்சியை முன்னெடுப்பதற்காக 15 அமைச்சர்கள் கொண்ட காபந்து அரசாங்கம் நாளைய தினம் பதவியேற்க உள்ளதாக ஜனாதிபதி காரியாலய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஆறு பேருக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூன்று பேருக்கும், அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஏனைய அமைச்சுப் பதவிகள் ஒன்றிணைந்த எதிரணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.