மனித உரிமைகளுக்கான அச்சுறுத்தல்..

Thursday, 21 November 2019 - 13:23

+%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4+%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D..
பேஸ்புக் மற்றும் கூகுளின் தரவு சேகரிப்பு, வணிக மாதிரிகள் உலகில் மனித உரிமைகளுக்கான அச்சுறுத்தலைக் குறிப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களுக்கு இலவச இணையதள சேவைகளை வழங்குவதும், பின்னர் வருமானம் ஈட்டும் விளம்பரங்களை இலப்புவைக்க அவர்களைப் பற்றிய தகவல்களைப் பயன்படுத்துவதும் கருத்து சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளின் வரம்பைத் தடுப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

வணிக மாதிரி தனியுரிமைக்கான உரிமையுடன் இது இயல்பாகவே பொருந்தாது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.