சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை

Thursday, 21 November 2019 - 20:12

%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+
சீனாவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 
சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தக போர் தொடர்கிறது.
 
இதனால் சர்வதேச பொருளாதாரத்திலும் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது
 
இதுதொடர்பான உடன்படிக்கை ஒன்று இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்று முன்னதாக கூறப்பட்டது.
 
இந்த உடன்படிக்கை இந்த மாதம் கைச்சாத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த போதும், அது அடுத்த ஆண்டு வரையில் பிற்போகும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகிறது.
 
அதேநேரம் தற்போது இருக்கின்ற நிலைமை தமக்கு பிடித்திருப்பதாகவும், சீனாவுடன் புதிய உடன்படிக்கைக்கு செல்லவேண்டுமா? என்பது தொடர்பில் தாம் ஆராய்வதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.