அழைப்பினை நிராகரித்த வடகொரியா

Thursday, 21 November 2019 - 22:13

%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE
தென்கொரியாவில் நடைபெறவுள்ள மாநாடு ஒன்றுக்காக விடுக்கப்பட்ட அழைப்பினை வடகொரியா நிராகரித்துள்ளது.

அடுத்தவாரம் சியோலில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்ளுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன்னிற்கு தென்கொரியா அழைப்பு விடுத்திருந்தது.

எனினும் அதற்கு உகந்த காலப்பகுதி இதுவல்ல என்று தெரிவித்து, அந்த அழைப்பினை வடகொரிய அரசாங்கம் நிராகரித்திருக்கிறது.

எவ்வாறாயினும் இந்த அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ள வடகொரியா, குறித்த மாநாட்டில் கிம் ஜொங் உன் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான சட்டரீதியான காரணங்கள் எதனையும் தங்களால் காண முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம், அமெரிக்காவுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கின்ற தென்கொரியா, தம்முடனான உறவினை பாதிக்கும் வகையில் நடந்துக் கொள்வதாகவும் வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது.