அணுசக்தி பேச்சுவார்தைக்கு ஈரான் தயார்..!

Wednesday, 04 December 2019 - 19:26

%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D..%21+
சட்டத்துக்கு புறம்பான முறையில் விதித்துள்ள பொருளாதார தடைகளை அமெரிக்க நீக்குமானால், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி ஹஸன் ருஹானி இன்று ஈரான் தொலைக்காட்சி ஒன்றில் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

பொருளாதாரத் தடைகளை நீக்கினால், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையின் நிரந்த அங்கத்துவ நாடுகளான அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யா, சீனா மற்றும் பிரான்ஸ் முதலான நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி, இணக்கப்பாடுகளை எட்டவும் தாங்கள் தயாராக உள்ளதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.