ஊடகவியலாளர் சந்திப்பை இரத்து செய்த ட்ரம்ப்

Thursday, 05 December 2019 - 8:15

%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4++%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D
நேட்டோ என அறியப்படும் வட அத்திலாந்திக் ஒப்பந்த அமைப்பின் மாநாட்டின் பின்னர் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.

நேட்டோ தலைவர்களின் மாநாடு லண்டனில் இடம்பெற்றது.

இந்த நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் டூருடோ, பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜொன்சன் மற்றும் ஃப்ரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் ஆகியோர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் விவாதித்த காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் டூருடோ, டொனால்ட் ட்ரம்ப்பை கேலிக்குட்படுத்தும் வகையில் தோன்றுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜஸ்ரின் டூருடொவை இரட்டை முகம் கொண்டவர் என டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

அத்துடன், நேட்டோ மாநாட்டின் பின்னர் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பையும் டொனால்ட் ட்ரம்ப் இரத்து செய்துள்ளார்.