21 வயதுடைய இளைஞன் கைது

Thursday, 05 December 2019 - 13:35

21+%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF+%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
மூன்று வௌவேறு பயங்கரவாத குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 21 வயதுடைய இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலிய காவல்துறையினரால் சிட்னியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெயர் குறிப்பிடப்படாத குறித்த நபர், ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என்றும், பயங்கரவாத செயற்பாடுகளுக்கு தயாராகும் ஆரம்ப நிலையில் அவர் இருந்ததாகவும் அவுஸ்திரேலிய காவல்துறை தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விடயங்களை இணையதளத்தில் பதிவேற்றிதாகவும், இரண்டு இளைஞர்களை தீவிரமயமாக்க முயற்சித்ததாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

லண்டன் பாலத்தில் கூரிய ஆயதத்தினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டு சில தினங்களின் பின்னர், இந்தக் கைது இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.