பதிவு கட்டணம் குறைப்பு

Thursday, 05 December 2019 - 19:47

%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
புதிய அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட வரி திருத்தம் காரணமாக வெளிநாட்டு தொழில்வாய்ப்பிற்காக செல்லும் பணியாளர்கள் செலுத்த வேண்டிய பதிவு கட்டணம் மற்றும் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் என்பனவற்றில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

17 ஆயிரத்து 837 ரூபாவாக அறவிடப்பட்ட பதிவு கட்டணம் 16 ஆயிரத்து 416 ரூபாயாக வரி திருத்ததிற்கு அமைய குறைக்கப்பட்டுள்ளது.

இதனுடன் 3 ஆயிரத்து 755 ரூபாவாக அறவிடப்பட்ட பதிவு புதுப்பித்தல் கட்டணம் 3 ஆயிரத்து 456 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்தம் கடந்த முதலாம் திகதி முதல் அமுலாக்கப்படுவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.