வாடிக்கையாளர் சேவைக்கு 24,000 முறை அழைப்பு விடுத்த நபர் கைது

Thursday, 05 December 2019 - 16:01

%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+24%2C000+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
ஜப்பானில் வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு 24 ஆயிரம் முறை அழைப்பு விடுத்த 71 வயது முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஜப்பானைச் சேர்ந்த அகிடோசி உகமோடோ என்ற 71 வயது முதியவர் அந்நாட்டின் பிரபல கையடக்க தொலைபேசி நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஆவார்.

இவர் தனது தொலைபேசியில் வானொலி ஒலிபரப்புகளை கொண்டுவர முடியவில்லை என தெரிவித்து பலமுறை கட்டணமில்லாத வாடிக்கையாளர் சேவை எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவாதித்துள்ளார்.

இவரது இந்த பிரச்சினைக்கு அந்நிறுவனம் பொறுப்பில்லை என்பதை பலமுறை எடுத்துக்கூறியும், குறித்த முதியவர் தொடர்ந்து வாடிக்கையாளர் சேவை முகவர்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு, இந்த நிறுவனம் அவர்களது ஒப்பந்தத்தை மீறியதாகவும் அந்நிறுவன ஊழியர்கள் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் இவரது தொடர் அழைப்புகள் மூலம் மற்ற வாடிக்கையாளர்களுக்கு சேவை விபரங்கள் வழங்க முடியாத நிலை அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வர்த்தக தடை ஏற்படுத்த முயற்சி செய்த குற்றச்சாட்டுகளின் கீழ் அகிடோசி ஒகமோடோ கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

அகிடோசி இரண்டு ஆண்டுகளில் மொத்தம் 24 ஆயிரம் முறை வாடிக்கையாளர் எண்ணிற்கு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.