15 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்...

Saturday, 07 December 2019 - 19:48

+15+%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D...
ஆப்கானிஸ்தானில், பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 15 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

கந்தஹர் மாகாணத்தில் தலிபான்களுக்கு எதிராக ஆப்கான் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் பின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, குறித்த தீவிரவாதிகளிடமிருந்த ஆயுதங்களும் அந்த நாட்டு பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து தலிபான்கள் இதுவரை எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த சில வாரங்களாகவே நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க் ஆகிய மூன்று மாகாணங்களில் ஆப்கான் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.