நபர் ஒருவர் கைது..!

Sunday, 08 December 2019 - 9:44

%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..%21
பேராதனை – முருதலாவ பகுதியில் உள்ள தேயிலை தொழிற்சாலையில் கழிவு தேயிலையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைவாக அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேயிலை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறி குறித்த சந்தேக நபர் தேயிலை உற்பத்தியின் போது சீனி கலவையை பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதற்காக பாரவூர்தியில் அவர் கொண்டு சென்ற 3 ஆயிரத்து 120 கிலோகிராம் கழிவு தேயிலையை விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றப்பட்டுள்ளனர்.