திருகோணமலை கடற் பரப்பில் நடந்த விபரீதம்..

Sunday, 08 December 2019 - 11:08

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D..
திருகோணமலை கிண்ணியா – உப்பாறு பாலத்திற்கு அருகில் மாகாவலி கங்கையில் படகு கவிழ்ந்த விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதுடன் மேலும் இரண்டு பேர் காணாமல் போயுள்ளனர்.

படகில் ஐந்து இளைஞர்கள் பயணித்துள்ள நிலையில் இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஒருவர் நீந்தி கரை சேர்ந்துள்ளதுடன் மேலும் ஒருவரை பிரதேசவாசிகள் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் காணாமல் போன மேலும் இரண்டு பேரை தேடும் பணிகளில் கடற்படையினர் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.