டொனால் ட்ரம்ப் பதவியேற்றதன் பின்னர் பாரிய மாற்றம்..

Sunday, 08 December 2019 - 13:26

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..
அமெரிக்காவும் ஈரானும் பரஸ்பரம் கைதிகளை விடுவித்துள்ளன.

டொனால் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவு பாரிய அளவில் பாதிப்படைந்திருந்தது.

இப்படியாக கைதிகள் விடுவிக்கப்படுவது மிகவும் அபூர்வமான விடயம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என தெரிவித்து கடந்த மூன்று வருடங்களாக சிறையடைக்கப்பட்டிருந்த சீயூ வெங்  என்ற அமெரிக்கரை ஈரான் விடுவித்துள்ளது.

அதே வேளை, அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட பொருளாதார தடைக்கு எதிராக செயல்பட்டார் என தெரிவித்து ஈரானை சேர்ந்த மசௌட் சொலிமானி தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தொடர்ந்தும் ஈரான் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய பல அமெரிக்கர்களும் விடுவிக்கப்படுவார்கள் என நம்புவதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட்ட அமெரிக்கர் சிறந்த உடல் நலத்துடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.