வட கொரியா மிக முக்கிய அணு ஆயுத சோதனை ஒன்றை மேற்கொண்டுள்ளதாக வடகொரிய அரச செய்தி ஸ்தாபனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை மூலம் வடகொரியாவின் ஆயுத வல்லமை மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
பாரிய ஆயுத தாக்கலை தரையில் இருந்து எதிர்கொள்ளும் நவீன வகையான தடுப்பு முறைமை அல்லது மிக வலுவான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் தொய்வு நிலை ஏற்பட்ட நிலையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை, அமெரிக்காவுடன், நீண்ட பேச்சுவார்த்தைகளில் தற்போது மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளுக்கான வடகொரிய ராஜதந்திரி கிம் சொங் அணு ஆயுத தடை குறித்து பேசுவதில் எந்த பலனும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.