நைஜீரியாவில் விபத்து-12 பேர் பலி

Tuesday, 10 December 2019 - 7:58

%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-12+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF
நைஜீரியாவில் பாரவூர்தியுடன், கொள்கலன் மோதி விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் 91 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நைஜீரியாவின் மத்திய பகுதியான நிஹரில் இந்த பாரவூர்தி பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் கொள்கலன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து இடம்பெறும் போது பாரவூர்தியில் 100 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவற்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

நைஜீரியாவின் மத்திய பகுதியில் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசிதிகள் இன்மையால் மக்கள் இவ்வாறான பாதுகாப்பற்ற பயணங்களை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.