மகிழ்ச்சிகர செய்தி...!! நிதி அமைச்சு

Thursday, 12 December 2019 - 17:40

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21%21+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81+
அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் அரச உரிமை வணிக அமைப்புகளின் பணியாளர்களுக்கும் இந்த வருடத்துக்கான மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு திறைசேரி அனுமதி வழங்கியுள்ளது.
 
நிதி அமைச்சு இதனைத் அறிவித்துள்ளது.
 
இதற்கான சுற்றுநிரூபம் ஒன்று திறைசேரியினால் சகல அமைச்சின் செயலகங்கள், அரச உரிமை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரச உரிமை தொழில்முயற்சிகளின் தலைவர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
சில அரச நிறுவனங்களுக்கான பணிப்பாளர் சபைகள் நியமிக்கப்படாதிருந்தாலும் கூட, வழங்கப்படக்கூடிய மேலதிக கொடுப்பனவை வழங்குமாறும் அந்த சுற்றுநிரூபத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.