வெள்ளைவேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது

Saturday, 14 December 2019 - 8:45

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரட்ன ஏற்பாடு செய்திருந்த வெள்ளை வான் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட இரண்டு பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் நேற்றிரவு மஹர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் தாம் வெள்ளை வேன் சாரதிகள் என அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அதேநேரம் விடுதலை புலிகள் அமைப்பினரின் தங்க ஆபரணங்களும் யாழ்ப்பாணத்திலிருந்து எடுத்துவரப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

மேலும் குறித்த வெள்ளைவானில் கடத்தப்படுகின்றவர்கள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.