திருத்தச் சட்டத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் வழக்கு

Saturday, 14 December 2019 - 13:02

%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81
இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ், அசாம் மாணவர்கள் சங்கம், ரிகாய் மஞ்ச் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பிலும் நேற்று இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யபட்டது.

பாகிஸ்தான், பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் இந்தியாவில் குடியேறிய இஸ்லாமியர்கள் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குறித்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடர்ந்தும் குறித்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

இந்த குடியுரிமை சட்ட திருத்தத்தி;ற்கு இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்வும் அனுமதியளித்திருந்தார்.

எவ்வாறாயினும் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சென்று குடியேறியவர்களுக்கு இந்த சட்டத்திருத்தத்தின் ஊடாக குடியுரிமை வழங்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.