வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..!

Saturday, 14 December 2019 - 14:30

%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21
சபரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுக்கும் காலி மாவட்டத்திலும் பிற்பகல் வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல, ஊவா, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த நாட்களில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 20 மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 61 ஆயிரத்துக்கு அதிகமானோர் இன்னும் பாதிக்கப்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.